செய்திகள்
கோப்புபடம்.

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

Published On 2021-07-17 09:16 GMT   |   Update On 2021-07-17 09:16 GMT
இப்பணிக்காக வருவாய் மற்றும் காவல்துறையினர் உரிய ஒத்துழைப்பு தர மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர்:
 
கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மற்றும் உடந்தையாக செயல்படும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்களுக்கு அறநிலையதுறை கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில், கோவில் சொத்துக்களை  ஆக்கிரமித்துள்ளோர், வாடகை செலுத்தாதோர் உரிய காலம் முடிந்து திரும்ப ஒப்படைக்காதோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இப்பணிக்காக வருவாய் மற்றும் காவல்துறையினர் உரிய ஒத்துழைப்பு தர மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோவில் சொத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அனைத்து கோவில் அலுவலர்களுக்கும் இது குறித்து அறிவிக்க வேண்டும். இதை பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News