செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

அரசு போக்குவரத்து கழகங்களில் டயர் பற்றாக்குறையை போக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2021-10-26 11:10 GMT   |   Update On 2021-10-26 11:10 GMT
அரசு போக்குவரத்து கழகத்துக்கு உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர்அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40 சதவீத பேருந்துகளை தீப ஒளிக்கு இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது உண்மையானால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

போதிய டயர்கள் இல்லாததால் அரசுப் பேருந்துகளில் ரீட்ரெட் செய்யப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தேய்ந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 34,000 டயர்கள் வாங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதமே அறிவிக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை வாங்கப்படாததே சிக்கலுக்குக் காரணம்.

உடனடியாக டயர்களை வாங்கி, பேருந்துகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News