செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 70 சதவீதம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

Published On 2020-10-18 06:59 GMT   |   Update On 2020-10-18 06:59 GMT
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 70 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஒரே நாளில் ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்தத்துடன் பதிவாகி கொண்டே இருக்கிறது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று மாலை வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 10 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 295 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களில் 70 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று ஒரே நாளில் ஏற்பட்டு இருக்கிறது.

சென்னையில் 1,132 பேர் நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்த படியாக கோவையில் 389 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

செங்கல்பட்டில் 239 பேருக்கும், சேலத்தில் 240 பேருக்கும், திருவள்ளூரில் 218 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடலூரில் 113 பேரும், ஈரோட்டில் 122 பேரும், காஞ்சிபுரத்தில் 148 பேரும், நாமக்கல்லில் 131 பேரும், தஞ்சாவூரில் 101 பேரும், திருப்பூரில் 159 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வேலூரில் சராசரியாக 100 பேர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 91 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலை வரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 944 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 533 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 12 ஆயிரத்து 907 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 ஆயிரத்து 504 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News