ஆட்டோமொபைல்
ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா மற்றும் எஸ்பி125 மாடல்கள் விலை திடீர் உயர்வு

Published On 2021-04-05 05:55 GMT   |   Update On 2021-04-05 05:55 GMT
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா மற்றும் எஸ்பி125 மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.


இந்திய சந்தையில் பல்வேறு இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவும் இணைந்துள்ளது. விலை உயர்வின் படி ஹோண்டா ஆக்டிவா 6ஜி எஸ்டிடி மாடல் ரூ. 67,843 என துவங்கி  டாப் எண்ட் மாடல் விலை ரூ. 71,089 என மாறி இருக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 125 டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 71,674 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 78,797 என மாறி இருக்கிறது. ஹோண்டா டியோ எஸ்டிடி மாடல் துவக்க விலை ரூ. 63,273 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 69,171 என மாறி இருக்கிறது. கிரேசியா மாடல் துவக்க விலை ரூ. 75,859 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 84,185 ஆகும்.



ஹோண்டா சிடி டிரீம் 110 மாடல் ரூ. 64,421 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 65,421 என்றும் லிவோ மாடல் ரூ. 69,971, லிவோ டிஸ்க் மாடல் ரூ. 74,171 என மாறி இருக்கிறது. ஹோண்டா சிபி ஷைன் விலை ரூ. 71,550 என்றும் டிஸ்க் மாடல் விலை ரூ. 76,346 என மாறி இருக்கிறது. ஹோண்டா எஸ்பி 125 டிரம் மாடல் ரூ. 77,145 என்றும் எஸ்பி 125 டிஸ்க் மாடல் ரூ. 81,441 என மாறி இருக்கிறது.

ஹோண்டா யூனிகான் மாடல் ரூ. 97,356, எக்ஸ் பிளேடு எஸ்டிடி ரூ. 1,09,264 என்றும் எக்ஸ் பிளேடு டிஎல்எக்ஸ் ரூ. 1,13,654 என்றும் ஹார்னெட் 2.0 மாடல் ரூ. 1,29,608 என்றும் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் ரூ. 1,31,608 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News