லைஃப்ஸ்டைல்
வேலைவாய்ப்பு தரும் மருத்துவ துணைப்படிப்புகள்..

வேலைவாய்ப்பு தரும் மருத்துவ துணைப்படிப்புகள்..

Published On 2021-10-09 03:33 GMT   |   Update On 2021-10-09 03:33 GMT
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம்.
மருத்துவம், அறிவியல் படிப்புகளை படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அதே துறையில் உள்ள குறுகிய கால டிப்ளமோ படிப்புகளை படித்தால் விரைவில் பணி நியமனம் பெறலாம். குறிப்பாக மருத்துவ துறையில் நிறைய துணை படிப்புகள் இருக்கின்றன. மருத்துவமனைகளில் பணியாற்ற பொது மருத்துவம் மட்டுமே படிக்கவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மிக குறைந்த செலவிலான துணைப்படிப்புகளும், மருத்துவமனையில் பணியாற்றும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். குறிப்பாக முதியோர் நலன் பாதுகாப்பு, ஆப்டோமெட்ரிஸ்ட், செவிலி உதவியாளர், பிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சியாளர்கள் போன்ற வேலைகளுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுபற்றி விளக்கமாக விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

முதியோர் நலன் பாதுகாப்பு

குழந்தைகள் நல மருத்துவர்களை ‘பிடியாட்ரிஷன்’ என்று அழைப்பது போல முதியோர் நல மருத்துவர் ‘ஜிடியாட்ரிஷன்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக 60 வயது கடந்த முதியோர்களை கவனிக்கவும், அவர்களது வாழ்நாளை ஆரோக்கியத்துடன் வழிநடத்தவும் கற்றுத்தரும் டிப்ளமோ படிப்பு இது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் உள்ள முதியவர்களுக்கு பணி செய்ய ஜிரீடியாட்ரிக் கேர் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆப்டோமெட்ரிஸ்ட்

கண் மருத்துவம் தொடர்பான டிப்ளமோ பயிற்சியான ‘ஆப்டோமெட்ரிஸ்ட்’ படிப்பு மூலமாக கண் பார்வை திறனை கண்டறிவதற்கும், கண் சிகிச்சை தொடர்பான மருத்துவ உதவி செய்வதற்கும் முடியும். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கண் சிகிச்சை மையங்கள் முதல் கண் கண்ணாடி கடைகளில் கூட இந்த படிப்புகளுக்கு வேலை வழங்கப்படுகிறது.

செவிலி உதவியாளர்

மருத்துவமனைகளில் செவிலி யருக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய இந்த படிப்புகள் உதவுகின்றன. நோயாளிகளின் படுக்கை மாற்றுவது தொடங்கி, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்வது, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் பயன்படுகிறார்கள். இந்த ஓராண்டு படிப்பை முடித்த பிறகு இவர்களுக்கு எளிதாக அனைத்து மருத்துவமனைகளிலும் வேலை கிடைக்கும்.

பிசியோதெரபிஸ்ட்

முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், விபத்தினால் காயம் ஏற்பட்டவர்கள் போன்றோருக்கு ஏற்படும் உடல்நிலை சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இந்த மருத்துவர்கள் பயன்படுகின்றனர். மூன்றாண்டு படிப்பிற்கு பிறகு 1 ஆண்டு பயிற்சி படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பேச்சு பயிற்சியாளர்கள்

செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கைகள் மூலம் சைகை மொழி கற்றுக்கொடுத்தல் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்புகளுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
Tags:    

Similar News