ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6,

இந்தியாவில் மாருதியின் புதிய எம்.பி.வி. கார் அறிமுகம்

Published On 2019-08-22 09:29 GMT   |   Update On 2019-08-22 09:29 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் எக்ஸ்.எல்.6 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்.எல். 6 எம்.பி.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்து. இந்தியாவில் புதிய எக்ஸ்.எல்.6 துவக்க விலை ரூ9.79 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. இது ஆல்ஃபா மற்றம் சீட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆல்ஃபா விலை ரூ. 11.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆறு பேர் பயணிக்கக்கூடிய பிரீமியம் எம்.பி.வி. கார் ஆகும். இது எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பிரீமியம் எம்.பி.வி. காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன் படி காரின் முன்புறம் புதிய கிரில், க்ரோம் ஸ்ட்ரிப் லைன்கள் இட்மபெற்றிருக்கிறது. 

இதில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.



மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 கார் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.5 லிட்டர் K15 சீரிஸ் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் சமீபத்திய எர்டிகா எம்.பி.வி. மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எந்ஜின் 104 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 138 என்.எம். டார்க் @4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

புதிய எக்ஸ்.எல்.6 எம்.பி.வி. காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், ஹெட்லைட்கள், டி.ஆர்.எல்.கள். டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பிற்கென டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ஹில்-ஹோல்டு அசிஸ்ட், இ.எஸ்.பி., சீட்-பெல்ட் ரிமைன்டர், ஹை-ல்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காருக்கான முன்பதிகள் துவங்கியுள்ளன. முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வினியோகம் உடனடியாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News