தொழில்நுட்பம்
ஐகூ இசட்3 டீசர்

ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியா வரும் முதல் ஸ்மார்ட்போன்

Published On 2021-06-01 04:13 GMT   |   Update On 2021-06-01 07:43 GMT
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ இசட்3 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசட்3 மாடலுக்கென மைக்ரோசைட் அமேசான் உருவாக்கப்பட்டு உள்ளது.

புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வது மட்டுமின்றி சிறப்பு போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



அமேசான் தளத்தில் ஐகூ இசட்3 மைக்ரோசைட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிடப்படுகிறது. புதிய ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. 

அம்சங்களை பொருத்தவரை ஐகூ இசட்3 மாடலில் 6.58 இன்ச் FHD+ 1080x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
Tags:    

Similar News