செய்திகள்
சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண் சிங்

பீகாரில் எம்.எல்.ஏ. வேட்பாளர் சுட்டுக்கொலை

Published On 2020-10-25 14:58 GMT   |   Update On 2020-10-25 14:58 GMT
பீகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.எல்.ஏ. வேட்பாளர் மற்றும் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் வரும் 28-ந்தேதி, நவம்பர் 3-ந்தேதி மற்றும் நவம்பர் 7-ந்தேயில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஷியோஹர் சட்டசபை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஜனதா தளம் ராஷ்டிரவாதி கட்சியின் எம்.எல்.ஏ. ஸ்ரீ நாராயண் சிங் (வயது 45) என்பவர் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கில் சுட்டனர். இதில் நாராயண் சிங் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவரது ஆதரவாளர் இவரும் மீதும் குண்டு பாய்ந்தது.

நாராயண் சிங் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை சென்றபோது வழியிலேயே உயிர் பிரிந்தது.

இதற்கிடையே. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை நாராயண் சிங் ஆதரவாளர்கள் அடித்தே கொன்றுவிட்டனர்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறியதாவது:-

சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண் சிங் மீது ஏற்கனவே 24-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் இருதரப்பு யுத்தம் போன்று நடந்துள்ளது. அப்பகுதியில் துணை ராணுவப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்
Tags:    

Similar News