ஆன்மிகம்
துர்க்கை

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்கினால் தீரும் பிரச்சனைகள்

Published On 2020-11-19 05:49 GMT   |   Update On 2020-11-19 05:49 GMT
ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டிற்கு உகந்த நாள் என சொல்லப்படுகிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை ஆகும். அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துவது விசேஷமானதாக கருதப்படுகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டிற்கு உகந்த நாள் என சொல்லப்படுகிறது. அதற்கு காரணம்.. ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.

அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் நாம் அவள்முன் வைத்தை பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.பொதுவாக திருமணம், குழந்தை வரம் வேண்டி பெண்கள் துர்க்கை அம்மனுக்கு ஞாயிற்று கிழமைகளில் எலுமிச்சை விளக்கேற்றி பிரார்த்தனை செய்து, வழிபட்டால் விரைவில் பலன் பெறாலாம் . அம்மன் வழிபாட்டுக்கு உகந்த செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

துர்க்கை கண்ணனுக்கு மூத்தவள் என்பதால், விஷ்ணு எடுத்த அவதாரங்களின் பிறந்த திதிகளான அஷ்டமி, நவமி ஆகியவையும் இவளின் வழிபாட்டுக்கு உகந்தவையாகும். துர்க்கைக்கு உரித்தான அமாவாசை, பவுர்ணமி திதிகள் மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் இவளை ஆராதிப்பதற்குச் சிறந்த நாட்களாகும்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கல் துன்பம் தீர ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், துர்க்கை சன்னிதியில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் ஆக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நெய் ஊற்றி, 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும்.

அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.இந்த பூஜையின்போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து வணங்க வேண்டும். பூஜைகள் முடித்தபின் ஆலயத்திலேயே 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்பொழுது, துர்க்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிச்சையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.
Tags:    

Similar News