ஆட்டோமொபைல்
கியா கார்னிவல்

அடுத்த தலைமுறை கியா கார்னிவல் அறிமுகம்

Published On 2020-08-19 11:02 GMT   |   Update On 2020-08-19 11:02 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் செடோனா எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் நான்காம் தலைமுறை மாடல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

2021 கியா கார்னிவல் மாடல் புதிய மிட்-சைஸ் பிளாட்ஃபாரிமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் கிராண்ட் யுடிலிட்டி வெஹிகில் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது நான்காம் தலைமுறை மாடல் 40 எம்எம் நீளமாகவும், 10எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 30 எம்எம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.



வடிவமைப்பில் புதிய மாடல் டைகர் நோஸ் கிரில், டைமன்ட் மெஷ் பேட்டன் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பின்புறம் எல்இடி லைட் பார் வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

புதிய கியா கார்னிவல் மாடல் 3.5 லிட்டர் ஜிடிஐ வி6 பெட்ரோல் என்ஜின், 3.5 லிட்டர் எம்பிஐ வி6 என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 290 பிஹெச்பி, 335 என்எம் டார்க், 268 பிஹெச்பி, 332 என்எம் டார்க் மற்றும் 199 பிஹெச்பி, 404 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News