செய்திகள்
பல்லடம் அரசு பள்ளி.

ஆசிரியர்கள், தன்னார்வலர் முயற்சியால் பல்லடம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

Published On 2021-08-23 08:07 GMT   |   Update On 2021-08-23 08:07 GMT
கொரோனா காலத்திலும் ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர். நடப்பு கல்வி ஆண்டு 650 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
பல்லடம்:

பல்லடம்- மங்கலம் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர் முயற்சியால் நடப்பு கல்வி ஆண்டு பள்ளியில்  மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா கூறியதாவது:-

கடந்த காலத்தில் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் யோசித்தனர். அதனால் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இச்சூழலில் தன்னார்வலர்கள் பலரின் முயற்சியால் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, இரவு காவலர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளியின் தரம் உயர்ந்தது. 

மேலும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா காலத்திலும் ஆசிரியர்கள் விடா முயற்சியுடன் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர். நடப்பு கல்வி ஆண்டு 650 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 700க்கு அதிகமான மாணவர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டில் 475 மாணவர்கள் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மொபைல் போன் வைத்துள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கிறோம். மற்றவர்களை வீட்டிலேயே படிக்க சொல்வதுடன் அவ்வப்போது வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர் என்றார்.
Tags:    

Similar News