ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2020-09-04 08:27 GMT   |   Update On 2020-09-04 08:27 GMT
கொரோனா ஊரடங்கின் தளர்வாக ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

கொரோனா ஊரடங்கின் தளர்வாக ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருதிறார்கள்.

அதேபோன்று இலவச தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. கடந்த 1-ந் தேதி 2 ஆயிரத்து 500 பக்தர்களும், 2-ந் தேதி ஆயிரம் பக்தர்களும், நேற்று (3-ந் தேதி) ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்தனர்.

இன்று (4-ந் தேதி) காலை வரை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடை வெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இருந்தனர். தொடர்ந்து ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மகாளய அமாவாசை ஆகும். அன்று ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க கோவில் நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ராமேசுவரத்தில் ஏற்கனவே அனைத்து தங்கும் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News