ஆட்டோமொபைல்
2021 எம்ஜி இசட்எஸ்

2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-09 09:00 GMT   |   Update On 2021-02-09 09:00 GMT
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் மேம்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் துவக்க விலை ரூ. 21 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மாடல் எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 20,99,800 மற்றும் ரூ. 24,18,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஐஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.



இந்த தொழில்நுட்பம் 2021 ஹெக்டார் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 35-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை புரிந்து கொண்டு பதில் அளிக்கிறது. மேலும் இதை கொண்டு காரின் பல்வேறு அம்சங்களை குரல்வழியே இயக்க முடியும். இத்துடன் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் முந்தைய மாடலை விட அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மாடலில் 44.5 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 143 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஹை-டெக் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இசட்எஸ் எலெக்ட்ரிக் காருடன் 50 kW DC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது காரை 0 முதல் 80 சதவீத சார்ஜ் செய்ய 50 நிமிடங்களை எடுத்து கொள்கிறது. வழக்கமான ஸ்டான்டர்டு ஏசி சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஆறு முதல் எட்டு மணி நேரத்தை எடுத்து கொள்கிறது.
Tags:    

Similar News