செய்திகள்
சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை படத்தில் காணலாம்.

திருப்பூரை குளிர்வித்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-07-05 09:44 GMT   |   Update On 2021-07-05 11:38 GMT
உடுமலை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஓரிரு இடங்களில் 1 1/2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். 

இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியில் இருந்து மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென மாலை 5 மணிக்கு மாநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையின் காரணமாக பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். 

இதேபோல் காங்கயம் பகுதியில் மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் காங்கேயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

மடத்துக்குளம், உடுமலை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஓரிரு இடங்களில் 1 1/2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. பரவலாக மழை பெய்ததால் திருப்பூரில் குளிர்ந்த காற்று வீசியதுடன், இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. நீண்ட நாட்களுக்குபிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags:    

Similar News