ஆன்மிகம்
திருத்தணி முருகன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சியை படத்தில் காணலாம்.

திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் நின்று சாமி தரிசனம்

Published On 2021-01-18 03:15 GMT   |   Update On 2021-01-18 03:15 GMT
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மீது அமைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 4 நாட்களாக விடப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பெருமளவில் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்தனர்.

திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்ததன் காரணமாக கோவில் ஊழியர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம் செய்ய ரூ.150 கட்டணம் செலுத்தி சென்ற பக்தர்கள், சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக காலையில் மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர், அவருக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் ஜரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News