லைஃப்ஸ்டைல்
அழகாக ஜொலிப்பதற்கு உதவும் மாம்பழ மசாஜ்

அழகாக ஜொலிப்பதற்கு உதவும் மாம்பழ மசாஜ்

Published On 2020-09-01 04:05 GMT   |   Update On 2020-09-01 04:05 GMT
இயற்கையாகவே இளமையாகவும் அழகாகவும் ஜொலிப்பதற்கு மாம்பழ மசாஜ் உதவும். மாம்பழங்களை கூழாக்கி மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம்.
இயற்கையாகவே இளமையாகவும் அழகாகவும் ஜொலிப்பதற்கு மாம்பழ மசாஜ் உதவும். மாம்பழங்களை கூழாக்கி மசாஜ் செய்வது பற்றி பார்ப்போம்.

மாம்பழம், பாதாம், ஓட்ஸ் மூன்றையும் பயன்படுத்தி சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். இவை இறந்த சரும செல்களின் அடுக்கை அகற்றி, சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும். ஒரு மாம்பழத்தை எடுத்து கூழாக்கிக்கொள்ளவும். அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் தூள், ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலரவிட்டு, காட்டன் துணியால் துடைக்கவும். பின்னர் நீரில் முகத்தை கழுவுங்கள்.

மாம்பழத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்தலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவிவிட்டு நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். முகப்பரு பிரச்சினை கொண்டவர்களுக்கு இது பலன் தரும்.

மாம்பழத்துடன் முல்தானி மெட்டியையும் உபயோகிக்கலாம். கோடைகாலத்தில் முல்தானி மெட்டியை நிறைய பெண்கள் பயன்படுத்துவார்கள். அது சருமத்தை மிருதுவாகவும் ஈரப்பத்தத்தன்மையை குறைய விடாமலும் பார்த்துக்கொள்ளும். மாம்பழக் கூழுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியையும், சிறிதளவு தயிரையும் கலந்து நன்கு குழைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி கால் மணி நேரம் உலரவிட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவிவிடலாம்.
Tags:    

Similar News