செய்திகள்

போக்குவரத்து நெரிசலால் உணவு தாமதம்- அரைமணி நேரம் கூடுதலாக நீடித்த ஆட்டம்

Published On 2018-09-09 11:54 GMT   |   Update On 2018-09-09 11:54 GMT
இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் போக்குவரத்து நெரிசலால் கூடுதலாக அரைமணி நேரம் நடைபெற்றது. #INDA
இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூரு ஆலுரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா ‘ஏ’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்டதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டெஸ்ட் போட்டி வழக்கத்தின்படி மதியம் 11.30 மணிக்கு வீரர்கள் சாப்பாட்டிற்குச் செல்வார்கள்.

சரியாக 11.30 மணியாகும்போது வீரர்கள் சாப்பாட்டிற்கு தயாரானார்கள். ஆனால் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாப்பாடு மைதானத்திற்கு வர நேரமாகிவிட்டது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை மேலும் அரைமணி நேரம் நீட்டிக்க முடிவு செய்தனர்.

அதன்படி மதியம் 12 மணிக்கே வீரர்கள் சாப்பிட செல்ல வேண்டியிருந்தது. டிராபிக் ஜாம் வீரர்களின் சாப்பாட்டை அரைமணி நேரம் தள்ளிப்போட்டு விட்டது.
Tags:    

Similar News