செய்திகள்
வாகன சோதனை

கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துங்கள் -கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

Published On 2021-08-27 16:44 GMT   |   Update On 2021-08-27 16:44 GMT
நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியே பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலை அளிப்பதாகவும், ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளருக்கு ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
Tags:    

Similar News