செய்திகள்
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் 5-ம் கட்ட சுற்றுப்பயணம் விவரம்

Published On 2021-02-23 09:06 GMT   |   Update On 2021-02-23 09:06 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அவரது 5-ம் கட்ட சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஜீவனூர், நான்குமுனை கூட்டு சாலை, விழுப்புரம் வடக்கு ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

அன்று மதியம் 1 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் கலைஞர் திடல், மதுராந்தகம், ஹைவே ஓட்டல் எதிரில், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

27-ந் தேதி காலை 8 மணிக்கு காஞ்சிபுரம் வடக்குமாவட்டத்தில் கரசங்கால், படப்பை தாம்பரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அன்று மதியம் 1 மணிக்கு சென்னை வடக்கு மாவட்டத்தில் வி.எஸ்.மணி நகர் விரிவு பகுதியிலும், சென்னை வட கிழக்கு மாவட்டத்தில் வடபெரும்பாக்கம் சாலையிலும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் மாதவரத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

28-ந்தேதி (ஞாயிறு) மதியம் 1 மணிக்கு சென்னை மேற்கு மாவட்டத்தில் ஓ.எம்.ஆர். சாலையிலும், சென்னை தெற்கு மாவட்டத்தில் கொட்டிவாக்கத்திலும், சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் ஒய்.எம்.சி.ஏ. திடலிலும்சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
Tags:    

Similar News