செய்திகள்

தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு வாய்ப்பு - புகழேந்தி

Published On 2019-02-11 05:36 GMT   |   Update On 2019-02-11 05:36 GMT
தேர்தல் அறிவிப்பு வெளியானால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று புகழேந்தி கூறியுள்ளார். #Pugalenthi #ADMK

தேனி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தேனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வர உள்ளதால் மனக்குழப்பத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களை கட்சிக்கு திரும்ப அழைக்கிறார். இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தற்போது தேர்தல அறிவிப்பு வெளியானால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை கூட பா.ஜ.க.தான் அறிவிக்கும். அந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இடம் பெறாது.

இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #ADMK

Tags:    

Similar News