ஆன்மிகம்
மகாசக்தி மாரியம்மன்

அவினாசி பெரியகருணைபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2021-02-23 08:34 GMT   |   Update On 2021-02-23 08:34 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெரியகருணைபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெரியகருணைபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது. முன்னதாக நேற்று அவினா சியப்பர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாடு, நிலத்தேவர் பூஜை, நவகோள் வழிபாடு, நிறைவேள்வி, கோமாதா வழிபாடு ஆகியவை நடந்தன. மாலை 5 மணிக்கு முதற்கால வேள்வி ஆகியன நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால வேள்வி பேரொளி வழிபாடு ஆகியவை நடக்கிறது.

பிற்பகல் 12 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை 5 மணிக்கு 3-ம் கால வேள்வி, திரவிய வேள்வி ஆகியவை நடைபெற்றது. நாளை (புதன்கிழமை) காலை 4.30 மணிக்கு 4-ம் கால வேள்வி, யாத்ரா தானம் ஆகியவை நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மகாசக்தி மாரியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News