செய்திகள்

தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்- காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2019-06-25 06:36 GMT   |   Update On 2019-06-25 06:36 GMT
காவிரியில் இருந்து 31.24 டி.எம்.சி. நீரினை கர்நாடகா திறந்திட உத்தரவிட வேண்டும் என காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும்படி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

‘கர்நாடகா அரசு தண்ணீர் வழங்காததாலும், நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 21-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும் கர்நாடக அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. ஜூன், ஜூலையை தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் சேர்த்து 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமையிடம் பெங்களூரு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தை இனி பெங்களூரிலேயே நடத்த வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூறியதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என தமிழகம் வலியுறுத்தியது.
Tags:    

Similar News