லைஃப்ஸ்டைல்
உருளைக்கிழங்கு பேஸ் பேக்

எண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்

Published On 2019-12-06 05:06 GMT   |   Update On 2019-12-06 05:06 GMT
உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு என்றால் அனைவருக்குமே பிடிக்கும், இது சாப்பிடுவதற்கு மட்டுமல்ல நம் அழகைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. உருளைக்கிழங்கை அழகைப் பராமரிக்க எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

கண்களைச் சுற்றிய கருவளையம் மற்றும் கண் வீக்கத்திற்கு உருளைக்கிழங்கினை அரைத்து அதன் சாறு எடுத்து கண்களைச் சுற்றி தேய்த்து காய்ந்ததும் கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும். தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு பேஸ்ட்டுடன் 2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய இரண்டையும் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் பளபளப்பாகும். தயிருடன் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ் மாஸ்க்காக முகத்தில் போட்டு நன்றாகக் காய்ந்ததும் கழுவி வந்தால், முகத்தின் நிறம் அதிகமாகும். முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க, உருளைக்கிழங்கை நறுக்கி பிரிட்ஜில் குளிர வைத்து அதை சருமத்தில் வைகக வேண்டும்.
Tags:    

Similar News