செய்திகள்
கோப்புப்படம்.

மீதமாகும் எண்ணையை தள்ளுவண்டி கடைகளுக்கு விற்கக்கூடாது- அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-07-18 08:56 GMT   |   Update On 2021-07-18 08:56 GMT
பெரிய நிறுவனங்களில் பயன்படுத்திய எண்ணை தள்ளுவண்டிக்கடைகளுக்கு விற்கக்கூடாது.
திருப்பூர்:

திருப்பூர்  மாவட்டத்தில் உடுமலை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்  பெரிய உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல்  எண்ணை சிறு உணவகங்களுக்கும் தள்ளுவண்டிக்கடைகளுக்கும் மலிவு விலையில் விற்கப்படுகிறது.

இவ்வாறு ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையில் பொரித்த உணவுகளை உண்பதால்  பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில்  உணவு பொருள் தயாரிப்பாளர்கள், தங்களிடம் சேகரமாகும் கழிவு எண்ணையை பயோ டீசல் உற்பத்திக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்காக உணவு பாதுகாப்பு மறுசுழற்சி திட்டத்தில் இணையவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:-

பெரிய நிறுவனங்களில் பயன்படுத்திய எண்ணை தள்ளுவண்டிக் கடைகளுக்கு விற்கக்கூடாது. பயன்படுத்திய எண்ணை பயோ டீசல் தயாரிப்புக்கு அனுப்ப வேண்டுமென பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் விதிகளை மீறும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரிக்கப்பட்டுள்ளது. கலப்பட உணவு சம்பந்தப்பட்ட புகாரை  94440 42322 எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றனர்.
Tags:    

Similar News