செய்திகள்
பிருந்தாகாரத்

அதிமுக- பாஜக கூட்டணி தோல்வி அடையும்: திருச்சியில் பிருந்தாகாரத் பேட்டி

Published On 2021-02-28 09:53 GMT   |   Update On 2021-02-28 09:53 GMT
தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியடையும் என்று பிருந்தாகாரத் கூறியுள்ளார்.

திருச்சி:

திருச்சியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு எல்லா வகையிலும் மாற்றங்களை எதிர் நோக்கியுள்ளது. நாட்டின் எல்லையோரங்களைக் காப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து, டில்லி எல்லைக்குள் விவசாயிகளை வரவிடாமல் தடுப்பதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

தமிழக மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியடையும்.

சிலமாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதை எதிர்த்து நிச்சயம் போராடுவோம்.

நாட்டின் கலாச்சாரம், ஜனநாயகம் ஆகியவற்றைச் சீரழிக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. மத்தியிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய பா.ஜ.க. தலைவர்கள் வெறுப்பின் தூதர்களாக உள்ளனர். இங்கு வந்து பிரிவினை பேசுகிறார்கள். பன் முகத்தன்மை கொண்ட நம் நாட்டை ஒருமுகத்தன்மை கொண்ட நாடாக்க முயல்கிறார்கள்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகுந்த காலத்தில் 100 நாள் வேலைக்கு பட்ஜெட்டில் 34.5 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு கடந்தாண்டு மிக மோசமாக செயல்படுத்தியுள்ளது. சராசரியாக 45 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு, தினக்கூலியாக சராசரியாக ரூ.191 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஊரக மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியமான இத்திட்டத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டச்செயலாளர் ராஜா உடனிருந்தனர்.

Tags:    

Similar News