செய்திகள்
மும்பையில் காற்றின் தரம் மோசம்

மும்பையில் காற்றின் தரம் மோசம்: ஆய்வு மையம் தகவல்

Published On 2021-11-17 03:03 GMT   |   Update On 2021-11-17 03:03 GMT
உலகளவில் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று மோசமான காற்றின் தரத்தில் மும்பை 6-வது இடத்தில் இருந்தது. டெல்லி முதல் இடத்தில் இருந்தது.
மும்பை :

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. நிதிதலைநகர் மும்பையில் வாகனப்பெருக்கம், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகளால் காற்றின் தரம் குறைந்து உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மும்பையில் காற்றின் தரம் மோசமாகி உள்ளது.

காற்றின் தரம் மற்றும் வானிலை ஆய்வு, ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினம் நகரில் காற்றின் தரம் 245 ஏ.கியூ..ஐ.யும், நேற்றும் 280 ஏ.கியூ.ஐ.யும் பதிவாகி உள்ளதாக கூறியுள்ளது. இந்த அளவு காற்றின் தரம் மோசமாக உள்ளதை குறிக்கிறது.

உலகளவில் உள்ள முக்கிய நகரங்களில் நேற்று மோசமான காற்றின் தரத்தில் மும்பை 6-வது இடத்தில் இருந்தது. டெல்லி முதல் இடத்தில் இருந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக உருவான வெப்பநிலை மாற்றத்தால் நகரில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு அதிகரித்து இருப்பதாக வல்லுநர்கள் கூறினர்.

இதேபோல கடந்த 2 நாட்களாக மும்பையின் கொலபா, மஜ்காவ் மற்றும் பி.கே.சி. பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக அதாவது 300 ஏ.கியூ.ஐ.க்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News