செய்திகள்
இந்திராணி, பீட்டர் முகர்ஜி

இந்திராணி, பீட்டர் முகர்ஜிக்கு மும்பை கோர்ட்டு விவாகரத்து வழங்கியது

Published On 2019-10-04 03:01 GMT   |   Update On 2019-10-04 03:01 GMT
இந்திராணி, பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை :

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைமை பொறுப்பு வகித்தவர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி முகர்ஜி பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

இந்திராணிக்கும், அவரது முதல் கணவர் சித்தார்த் தாசுக்கும் ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்தனர். அதேபோல பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் ராகுல் முகர்ஜி.

இந்தநிலையில், ஷீனா போரா ராகுலை முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இந்திராணி முகர்ஜி, இவரது 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவாகரத்து முடிவை பீட்டர் முகர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு மும்பை பாந்திராவில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று குடும்ப நல கோர்ட்டு இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

Tags:    

Similar News