செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

Published On 2021-06-09 15:20 GMT   |   Update On 2021-06-09 15:20 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு விழா ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தனர்.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் அதற்குரிய ஜெனரேட்டர் ஆகியவற்றை முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர், முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தினர், வநேத்ரா முத்தாயம்மாள் குரூப் இன்ஸ்டிடியூசன்ஸ் நிர்வாகத்தினர், முத்தாயம்மாள் சேகோ மற்றும் ஸ்டார்ச் உற்பத்தி நிறுவனத்தினர், கோவை விஸ்வேக் ஆகியோர் இணைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளிகளை மருத்துவ கண்காணிப்பில் பராமரிக்க ஸ்டெப் டவுன் வார்டினையும் திறந்து வைத்தனர். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனியார் நிறுவனங்கள் வழங்கிய என்.ஐ.வி.கருவியை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவரிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டர் மெகராஜ், உதவி கலெக்டர் கோட்டைக்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி, நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி செயலாளர் குணசேகரன், வநேத்ரா முத்தாயம்மாள் குரூப் இன்ஸ்டிடியூசன்ஸ் தலைவர் கே.பி. ராமசாமி, செயலாளர் முத்துவேல் ராமசாமி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பிரேம்குமார், ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் கேபி ஜெகநாதன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News