செய்திகள்

விக்கெட் வீழ்த்த சில நேரங்களில் அதிர்ஷ்டமும் தேவையாகிறது- முகமது ஷமி

Published On 2018-09-11 12:07 GMT   |   Update On 2018-09-11 12:07 GMT
சிறப்பாக பந்து வீசிய போதிலும் சில நேரங்களில் விக்கெட்டுக்கள் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 122 ஓவர்கள் விளையாடி 332 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் முகமது ஷமி 30 ஓவர்கள் வீசினார். 7 மெய்டன்களுடன் 72 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்த முடியவில்லை. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங், ரிவர்ஸ்-ஸ்விங் என இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். பந்து எட்ஜ் ஆகியது. ஸ்டம்பிற்கு மேலாக சென்றது. ஆனால் விக்கெட் மட்டும் விழவில்லை.



2-வது இன்னிங்சில் 25 ஓவர்கள் வீசி 3 மெய்டனுடன் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் 55 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் ‘‘சிறப்பாக பந்து வீசினாலும் சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவை. குறிப்பாக புதுப்பந்தில் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளரின் முக்கிய இலக்கு சரியான இடத்தில் பந்தை தொடர்ந்து பிட்ச் செய்வதுதான். ஆனால் விக்கெட்டுக்களை அறுவடை செய்வதில் அதிர்ஷ்டமும் தேவையாக உள்ளது’’ என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News