தொழில்நுட்பம்
ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் 12 உற்பத்தி செலவை குறைக்க ஆப்பிள் போட்ட மாஸ்டர் பிளான் லீக்

Published On 2020-08-21 12:27 GMT   |   Update On 2020-08-21 12:27 GMT
ஐபோன் 12 உற்பத்தி செலவை குறைக்க ஆப்பிள் போட்ட மாஸ்டர் பிளான் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் 5ஜி வசதி வழங்கப்படும் பட்சத்தில் ஐபோன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. 

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனில் பயன்படுத்தும் இதர உபகரணங்களில் மாறுதலை செய்து உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ, சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான செலவு 75 முதல் 85 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5613 முதல் ரூ. 6436) வரை இருக்கும் என கணித்துள்ளார். இத்துடன் 5ஜி மில்லிமீட்டர் வேவ் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 125 முதல் 135 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 9355 முதல் ரூ. 10103) வரை செலவாகும் என கணித்துள்ளார்.  



இந்த செலவீனத்தை மற்ற பாகங்களில் மாற்றம் செய்து ஈடுகட்ட ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆப்பிள் நிறுவனம் பேட்டரி போர்டில் மாற்றங்களை மேறகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கென ஆப்பிள் எளிமையான மற்றும் சிறிய வடிவமைப்பை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கான போர்டுகளின் செலவீனத்தில் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை சேமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஐபோன் 12 சீரிஸ் விலையை குறைக்க வழிவகுக்கும் என தெரிகிறது.

இத்துடன் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் அடாப்டர் வழங்காது என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News