ஆன்மிகம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.

மகாளய அமாவாசையன்று வெறிச்சோடிய ராமேசுவரம் அக்னி தீ்ர்த்த கடற்கரை

Published On 2021-10-07 03:01 GMT   |   Update On 2021-10-07 03:01 GMT
மகாளய அமாவாசையான நேற்று பக்தர்களுக்கு தடையால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை வெறிச்சோடியது. அதே நேரத்தில் அதன் அருகே உள்ள சங்குமால் கடலில் ஏராளமானோர் நீராடினார்கள்.
ராமேசுவரம் கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிவது வழக்கம். அங்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்து, ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான புரட்டாசி மகாளய அமாவாசை நேற்று வந்தது. இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்களாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், திதி, தர்ப்பண பூஜை செய்யவும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியானது பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அக்னி தீர்த்த கடல் பகுதியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இருந்தாலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் நேற்று வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரத்தில் புனித நீராட வந்திருந்ததனர். அவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள சங்குமால் கடல் பகுதியில் புனித நீராடிவிட்டு கோவில் வாசல் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

கோவிலுக்குள் பக்தர்கள் செல்லவும் தடை இருந்ததால் வேண்டுதல்களை கோவில் வாசல்களிேலயே பக்தர்கள் நிறைவேற்றினர். குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடனாக பெண்கள் பலர், கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கம்பிகளில் தொட்டில்களை கட்டி தொங்க விட்டு இருந்தனர்.
Tags:    

Similar News