செய்திகள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

Published On 2020-06-14 17:23 GMT   |   Update On 2020-06-14 17:23 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
சென்னை:

தி.மு.க. சார்பில் இன்று மாலை காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து  இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் சில குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெ. அன்பழகன் உள்ளிட்ட மறைந்த திமுக முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி, தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவரின் மறைவு, திமுகவின் நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன் மறைவு, மறைந்த திமுக பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் மகள் மணமல்லி ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
Tags:    

Similar News