லைஃப்ஸ்டைல்
பீட்ரூட் குழம்பு

பீட்ரூட் வைத்து அருமையான குழம்பு செய்யலாம் வாங்க

Published On 2021-01-02 09:33 GMT   |   Update On 2021-01-02 09:33 GMT
பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
கீறிய பச்சைமிளகாய் - 2,
குழம்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை :

பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும். 

அருமையான பீட்ரூட் குழம்பு தயார்!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News