உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் வீடுகளில் தனிமை படுத்தியவர்களுக்கு உதவ 1000 ஊழியர்கள் நியமனம்

Published On 2022-01-03 09:48 GMT   |   Update On 2022-01-03 09:48 GMT
சென்னையில் மாநகராட்சி மருத்துவமனைகளில் 1000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மற்றும் மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஆயிரம் ஊழியர்கள் மீண்டும் நியமிக்கப்படுகிறார்கள்.

மொத்தம் உள்ள 200 வார்டுகளில் வார்டுக்கு 5 பேர் வீதம் இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்த தன்னார்வ ஊழியர்கள் சென்னையில் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள், உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவார்கள். மேலும் தனிமைபடுத்தப்பட்டவர்கள் வீடுகளில் விதிகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது இதுபோன்ற தன்னார்வலர்கள் அதிகளவு நியமிக்கப்பட்டு வீடுவீடாக பரிசோதனை செய்தனர். தற்போது பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால் அந்த பணி மேற்கொள்ளப்படவில்லை.

அதற்கு பதிலாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்று வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உதவி செய்வதற்காக இந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் பரிசோதனை மையங்கள் 30 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகளில் 1000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
Tags:    

Similar News