செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்

Published On 2021-02-16 05:17 GMT   |   Update On 2021-02-16 05:17 GMT
கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை:

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்.

மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Tags:    

Similar News