ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட் பி.எஸ்.6 முன்பதிவு துவக்கம்

Published On 2020-03-19 10:49 GMT   |   Update On 2020-03-19 10:49 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் பி.எஸ்.6 மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.



ஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் பி.எஸ்.6 காருக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ரேபிட் மாடலில் பி.எஸ்.6 ரக 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் மாடலுக்கான விநியோகம் ஏப்ரல் 14-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய 1.0 லிட்டர் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எதகிர்காலத்தில் இந்த காரில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் போலோ மற்றும் வென்டோ பி.எஸ்.6 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 110 பி.ஹெச்.பி. பவர், 175 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே செயல்திறன் ரேபிட் மாடலிலும் இருக்கும் என தெரிகிறது.



என்ஜின் தவிர புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது. ஸ்கோடா ரேபிட் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆம்பியன்ட் இன்டீரியர் லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

இந்திய சந்தையில் ஸ்கோடா ரேபிட் மாடல் மாருதி சுசுகி சியாஸ், 2020 ஹோண்டா சிட்டி உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய கார் விலை தற்போதைய  மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News