செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-08-06 10:50 GMT   |   Update On 2020-08-06 10:50 GMT
மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மதுரையில் இன்று கொரோனா சிக்சைக்கு புதிதாக 900 படுக்கை வசதி கொண்ட மையம் செயல்படத்தொடங்கியுள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி இருக்கிறதா என அலுவலர்கள் நேரில் கேட்டறிந்து வருகிறார்கள்.  தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடப்பதால் தான் மதுரையில் கொரோனா பாதிப்பு இப்போது குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதி உள்ளது.

உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்களின்படி கொரோனா பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தீவிரமாக கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அரசின் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

தோப்பூரில் அமைய உள்ள எம்ய்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மதுரையில் ரூ.25 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கும் பணி விரைவில் தொடங்கும்.

மதுரை மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத்திட்டம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News