இந்தியா
கொரோனா தடுப்பூசி

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி

Published On 2021-12-28 06:24 GMT   |   Update On 2021-12-28 09:16 GMT
ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை பயன்படுத்தவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பு சிகிச்சை முறையே அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள அவசர அனுமதியை வழங்கி உள்ளது. 


ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவி ஷீல்ட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக கோவோ வாக்ஸ் மற்றும் கார்பெ வாக்ஸ் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக  மோல்னு பிரவீர் வைரஸ் தடுப்பு மருந்தை அவசர காலத்திற்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் நடவடிக்கையை அத்துறையின் அமைச்சர் மனுசுக் மாண்டவியா பாராட்டி உள்ளார்.
Tags:    

Similar News