செய்திகள்
வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுக்கும் வசதியை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

கோவை புறநகர் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுக்கும் வசதி

Published On 2021-06-08 02:41 GMT   |   Update On 2021-06-08 02:41 GMT
பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் செல்வதை தடுக்க வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுக்கும் வசதி கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் செல்வதை தடுக்க வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுக்கும் வசதி கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை மாவட்ட அலுவலகத்தில் உள்ள மையத்தில் வைத்து இந்த வசதியை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றார்.

மேலும் வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் தொடர்பாக வீடியோ கால் மூலம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, பேரூர், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் புகார் கொடுக்க 7708 100 100 என்ற வாட்ஸ்-அப் எண் மூலம் அனுப்பினால் போதும். இந்த மனுக்கள் மீது தினமும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை வீடியோ கால் மூலம் விசாரணை நடத்தப்படும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News