செய்திகள்
விபத்தில் காயமடைந்த வாலிபரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தபோது எடுத்த படம்.

விபத்தில் சிக்கிய வாலிபருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உதவி

Published On 2021-04-01 03:31 GMT   |   Update On 2021-04-01 03:31 GMT
விபத்தில் சிக்கிய வாலிபரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சிகிச்சைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்பாடு செய்தார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னை தண்டலம் சவீதா மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள காரில் சென்றார். அவர் திண்டிவனம்- சென்னை 4 வழிச்சாலையில் படாளம் கூட்டுரோடு அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்தக்காயத்துடன் ரோட்டில் கிடந்தார்.

இதைக்கண்டதும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக காரை விட்டு இறங்கினார். அந்த வாலிபருக்கு முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் அந்த வாலிபரை ஏற்றி போலீஸ்காரர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் அங்குள்ள டாக்டரை தொடர்புகொண்டு விபத்தில் சிக்கிய வாலிபருக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் நடவடிக்கையினால் அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த கசிவும் நிறுத்தப்பட்டது. அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும், அதிவேகத்தில் செல்வது, செல்போனை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News