செய்திகள்
மந்திரி ராஜேஷ் தோபே

கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்க வேண்டாம்: தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு, மந்திரி எச்சரிக்கை

Published On 2021-04-07 02:12 GMT   |   Update On 2021-04-07 02:12 GMT
தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவிக்கு புகார்கள் வந்தது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதில் தனியார் ஆஸ்பத்திரிகள் சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேவிக்கு புகார்கள் வந்தது.

இதுதொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

தனியார் ஆஸ்பத்திரிகள் தேவையற்ற பரிசோதனைகள் மூலம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிப்பதற்கு முன்பு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் டெபாசிட் செய்ய சொல்வதாகவும் புகார் வந்தது. இதுபோன்று நோயாளிகளிடம் தனியார் ஆஸ்பத்திரிகள் கொள்ளையடிக்க கூடாது.

நோயாளிகளிடம் கொள்ளையில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவிற்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசவர் ஊசி மருந்துகளை நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பயன்படுத்த கூடாது. மாநில பணிக்குழு வகுத்துள்ள நடைமுறையின் படி செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News