செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக திரண்டு நின்ற தொழிலாளர்கள்.

8 பேருக்கு தொற்று உறுதியானதால் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

Published On 2021-07-17 11:20 GMT   |   Update On 2021-07-17 11:20 GMT
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பூர்:
 
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 138 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 86,346 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 83,939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 810 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 1,597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும்  தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

இதனிடையே  திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ரெயில்நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த  1-ந்தேதி முதல் இதுவரை வடமாநில தொழி லாளர்கள் 5,907 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது-. வடமாநில தொழிலாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது  சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் பனியன் நிறுவனங்கள் அரசின்  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அதற்கேற்ப தொழிலாளர்களை  பணியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரி சோதனை  தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்களை  சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பனியன் நிறுவனங்களுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News