செய்திகள்
முக கவசம்

ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.14.87 லட்சம் அபராதம் வசூல்

Published On 2021-06-09 02:48 GMT   |   Update On 2021-06-09 02:48 GMT
ரெயில் நிலையங்களிலும் பயணிகள் முக கவசம் அணியாமல் வந்தால், ரூ.500 அபராதம் வசூல் செய்ய இந்தியன் ரெயில்வே மண்டலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன.

அந்த வகையில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் மாநில அரசுகளால் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரெயில் நிலையங்களிலும் பயணிகள் முக கவசம் அணியாமல் வந்தால், ரூ.500 அபராதம் வசூல் செய்ய இந்தியன் ரெயில்வே மண்டலங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஜூன் மாதம் 7-ந் தேதி வரை தெற்கு ரெயில்வேக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாத 3 ஆயிரத்து 53 பேரிடம் ரூ.14 லட்சத்து 86 ஆயிரத்து 700 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, முக கவசமும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News