செய்திகள்
ஷெர் பகதூர் டியூபா

நேபாள நாட்டின் மந்திரிசபை விரிவாக்கம்: 90 நாட்களுக்குப் பிறகு நடந்தது

Published On 2021-10-08 10:49 GMT   |   Update On 2021-10-08 10:49 GMT
நேபாள நாட்டின் பிரதமராக ஷெர் பகதூர் டியூபா பதவி ஏற்றபின், சுமார் 90 நாட்கள் கழித்து மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி இருந்து வந்தார். அவருக்கு எதிர்ப்பு கிளம்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஷர்மா ஒலிக்குப் பதிலாக ஷெர் பகதூர் டியூபாவை பிரதமராக நியமித்தது. மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் ஷெர் பகதூர் டியூபா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 4 மணிக்கு புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஷெர் பகதூர் டியூபா பதவி ஏற்ற 90 நாட்களுக்குப் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News