செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் நாளை மார்க்கெட் செயல்படுமா?

Published On 2021-09-21 05:01 GMT   |   Update On 2021-09-21 05:01 GMT
ஒரு பிரிவினர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டு நாளை 22-ந்தேதி மகாசபை கூட்டம் நடத்த தங்களுக்கு சாதகமான வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. 65 கடைகள் உள்ளன. ஒரே பதிவு எண்ணுடன் (39/2011) இந்த மார்க்கெட்டில் மாநகர மார்க்கெட் வியாபாரிகள்சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என இரண்டு சங்கங்கள் செயல்படுகின்றன. 

இவர்களில் ஒரு பிரிவினர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய திட்டமிட்டு நாளை 22-ந்தேதி மகாசபை கூட்டம் நடத்த தங்களுக்கு சாதகமான வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மற்றொரு சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தினசரி மார்க்கெட் நுழைவு வாயிலில் 400 வியாபாரிகள் நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு சங்கத்தின் மகாசபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. எனவே நாளை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு வைத்துள்ளனர்.

மகாசபை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த வியாபாரிகள் சங்கத்தினர் சிலர், மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகாசபை கூட்டம் நடப்பதால் நாளை 22-ந்தேதி கடை விடுமுறை என அறிவிப்பு வைத்துள்ளனர்.
Tags:    

Similar News