செய்திகள்
பாபா ராம்தேவ்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேச நலனுக்கு எதிரானது - பாபா ராம்தேவ்

Published On 2021-10-24 05:40 GMT   |   Update On 2021-10-24 05:40 GMT
ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும், இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்றும் பிசிசிஐ அறிவித்தது.
நாக்பூர்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

காஷ்மீரில் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதால் பாகிஸ்தானுடன் உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

2 மத்திய மந்திரிகள் இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். ஆனால் இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும், இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்றும் அறிவித்தது.



இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது தேச நலனுக்கு எதிரானது என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவது ராஷ்டிர தர்மத்துக்கு எதிரானது. தேச நலனுக்கு இது நல்லதல்ல. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் பயங்கரவாத விளையாட்டை ஒரே நேரத்தில் விளையாட முடியாது.

இளம் தலைமுறையினர் தற்போது போதை பொருளில் சிக்கி கொள்வது வேதனை தருவதாகும். பிரபலங்கள் இந்த சதியில் ஈடுபடுவது மக்களிடம் தவறான உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு பாபா ராம்தேவ்கூறியுள்ளார்.

Tags:    

Similar News