ஆன்மிகம்
காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம்.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2021-08-16 08:30 GMT   |   Update On 2021-08-16 08:30 GMT
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு ஆந்திர மாநிலம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திரதினம் என்பதால் இரண்டு நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் நான்கு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து பயன்படுத்தி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். சமூக இடைவெளியின்றி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதித்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News