செய்திகள்
தோவாளை பூச்சந்தை

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-09-09 07:04 GMT   |   Update On 2021-09-09 07:04 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆரல்வாய்மொழி:

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், ராதாபுரம், புதியம்புத்தூர் மாட நாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சி பூவும், சங்கரன்கோவில், ராஜபாளையம், வத்தலகுண்டு, கொடைரோடு, மானாமதுரை ஆகிய பகுதியில் இருந்து மல்லிகைப்பூவும், பெங்களூர், ஓசூர் பகுதியில் இருந்து பட்டர் ரோஸ், மஞ்சள் கிரோந்தி, தென்காசி, அம்பாசமுத்திரம், புளியரை, திருக்கண்ணங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் கொழுந்தும், தோவாளை, ராஜாவூர், தோப்பூர் பகுதியிலிருந்து கோழிக்கொண்டை, சேலத்திலிருந்து அரளிபூ சந்தைக்கு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.700, மல்லிப்பூ ரூ.800, கனகாம்பரம் ரூ.1000, முல்லை ரூ.700, அரளி ரூ.200, சேலம் அரளி ரூ.300, சம்பங்கி ரூ.400 ஆக கிடுகிடுவென விலை உயர்ந்துள்ளது. மேலும் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் பூக்கள் விலை உயர்வால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News