ஆன்மிகம்

ஜெகதீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2019-04-25 08:43 GMT   |   Update On 2019-04-25 08:43 GMT
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஜெகதீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை நடக்கிறது
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஜெகதீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு காப்புக் கட்டுதல், மாலை 6 மணிக்கு லலிதா சகஸ்ரநாம வழிபாடு, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அபிஷேக தீபாராதனை, பஜனை, தப்பட்டை மேளம், சிறப்பு பூஜை போன்றவை நடைபெறும்.

4-ந் தேதி காலை 9 மணிக்கு ராமர் கோவிலில் இருந்து பால்குடம், களப குடம், எண்ணை குடம், மஞ்சள் குடம், சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்து வருதல் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 6-ந் தேதி காலை 6 மணிக்கு தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு துர்க்கா பூஜை, இரவு 7 மணிக்கு அன்னைக்கு சிறப்பு பூஜை போன்றவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News