செய்திகள்
பிரதமர் மோடி

ரஷியாவில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2019-09-05 13:20 GMT   |   Update On 2019-09-05 13:20 GMT
ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
விளாடிவோஸ்டோக்:

ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ரஷ்யா வந்து சேர்ந்தார். மோடிக்கு விளாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ரஷிய ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மோடியை வரவேற்றனர். இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, அங்கிருந்து கிழக்கு மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் மோடியை வரவேற்றனர்.  

பிரதமர் மோடி அதிபர் விளாடிமிர் புதினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். அப்போது, ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியாக முழுநேர கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
Tags:    

Similar News